Friday, August 25, 2017

கவிஞர் மஹாகவி

துரைசாமி உருத்திரமூர்த்தி(அளவெட்டி, யாழ்ப்பாணம்) (சனவரி 9, 1927 - சூன் 20, 1971) ஈழத்தின் கவிதைமரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் மஹாகவி என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய புனைபெயர்கள் - பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் என்பனவாகும். நீலாவணன்முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.
Image result for uruthiramoorthy


‘சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை இதைவந்து கடல் கொண்டு போகும்
கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும்
வெறுவான வெளிமீது மழைவந்து சீறும்
வெறிகொண்ட புயல்நின்று கரகங்கள் ஆடும்
நெறிமாறு பட நூறு சுழிவந்து சூழும்
நிலையான தரைநீரில் இலைபோல் ஈடாடும்
இருளோடு வெளியேறி வலைவீசினாலும்
இயலாது தரவென்று கடல் கூறல் ஆகும்
ஒரு வேளை முகில் கீறி ஒளி வந்து வீழும்
ஒரு வேளை துயர் நீள உயிர் வெந்து சாகும்’
-மஹாகவி உருத்திரமூர்த்தி

புள்ளி அளவில் ஒரு பூச்சி 

புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல
மனம்
ஒத்திருந்த வேளை!

ஓழுங்காக அச்சடித்த
வெள்ளைத் தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்.

நீ இறந்து விட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு

வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்
“தாயே’ என அழுத
சத்தமும் கேட்கவில்லை.

கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடியிருக்கவில்லை.

காட் டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்ததுபோல்,
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.

மீதியின்றி நின்னுடைய
மெய் பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது,
தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே!

காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து
மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.
-மஹாகவி உருத்திரமூர்த்தி

Tuesday, June 27, 2017

கம்ப இராமாயணம்

http://www.tamilsurangam.com/literatures/kambar/ramayanam.html#.WVH345KGPIX
and
http://www.tamilvu.org/library/l3700/html/l3700001.htm

சக்திமுற்றப் புலவர்

சக்திமுற்றப் புலவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சக்திமுற்றம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல்
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

என்ன ஒரு வார்த்தைப் பிரயோகம். அப்படியே காட்சியைக் கண் முன்னே கொண்டு வரும் லாவகம்.
‘படுக்கப் பாயில்லை, போர்த்திக்கொள்ள போர்வையில்லை, நிறையக் குளிர்கிறது. என்னால் தூங்க்க் கூட இயலவில்லை. ஏதோ உயிரோட இருக்கேன்’ என்று புலம்ப வேண்டிய ஒரு நிகழ்வை,

கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

என்று அந்த சூழலை ஒரு கணத்தில் விவரித்து உணர்த்தும் பாங்கு.

யாராவது குளிரில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருப்பதைப் பார்க்கும் போதெல்லாம்இந்த வரிகளின் தத்ரூபம் எனக்கு மறுபடியும் உணர்த்தப்படும்.

இந்த வரிகளின் பொருளை நான் எப்படி ரசிக்கிறேன் என்று விவரித்தால், பொருள் சொல்வது போல் ஆகிவிடுமோ என்வெண்ணி, சொல்லாமல் விடுகிறேன். அவ்வளவு எளிமையான, கவிதைநயம் மிகுந்த சொற்கள்.

அதே போலதன் வீட்டை வர்ணிக்கும் போது..ஆஹா..எவ்வளவு யதார்த்தம்..
பாடு பார்த்திருக்கு மென் மனைவி..கணவனின்றிவாழ்விற்குஉணவுக்கு சிரமப்படும் பெண் எப்படி தன் உழைப்பை நம்பி நிற்பாளோஅந்தக் காட்சி கண்முன்னர் விரிகிறது..

நனைசுவர்க்கூரைகணைகுரற்பல்லி..சூழல் எவ்வளவு இறுக்கமாக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு என்று கணவன் கற்பனை செய்யும் காட்சி..அற்புதம்..

இதில் சொல்லப்பட்டிருக்கும் வரிகள், அதன் பொருளைவிட சொல்லாமல் விடப்பட்டிருக்கும் அர்த்தங்கள் என்னை மிகவும் பாதித்தவை. வாழ்வில் அனுபவம் பெறப்பெற, நிறைய அர்த்தங்கள் புரிந்தன.

மனைவியின் மேல் கொண்ட அன்பு, எந்த நிலையிலும் இல்லாளுக்கு தகவல் தர வேண்டும் என்ற உணர்வு, குடும்பத்திற்காக எவ்வளவு வசதிக்குறைவையும் தாங்கும் குணம்..

யாரிடம் உதவி கேட்கிறோமோ, அவர்களின் சிறப்பை முதலில் சொல்லி, பிறகு நம் உதவியைக் கேட்பது (நாரையைப் புகழ்வது...)  Diplomacy ?

உதவி கேட்கும் போது உங்கள் வேலையை முடித்துவிட்டு, பிறகு உங்களால் முடிந்தபோது செய்யுங்கள் என்று சொல்லும் பாங்கு (தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்)....

வெறும்புற் கையுமரிதாங் கிள்ளைசோறும் என்வீட்டில் வரும்
எறும்புக்கு மாற்பதமில்லை முன்னாளென் னிருங்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின்

தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமற் றெவுட்டியதே.

Tuesday, February 14, 2017

விரதம்


பொறியைந்துமைம் புலன்வழிபுகாது
நெறிமுறை பிறழாதிரிகரண சுத்தியோடுண்ணக்
கறிவகை சமைத்தேழை
அடியவர்க்களித்து நின் அறிவொக்க சுருக்கி விடுத்துண்டு ஆன்மா
உறியுடையோன் வழிலயத் திருத்தல் விரதமாம்..

தமிழ் மொழி

https://www.scribd.com/document/35659281/Ilakkana-Vilakkavurai-KBSM